குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்

06:27 மணி

 

Loading...

பரபரப்புடன் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே தான் வெற்றிபெற்றால் தனக்குக் கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை குழந்தைகளின் படிப்பு மற்றும் பிற நல்ல விஷயங்களுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்திருந்தார் ஆரவ்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ள ஆரவ், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தனக்கு பரிசுத் தொகையாக கிடைத்த ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சதை குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுத்துள்ளார்.

அவரது இந்த சேவைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பல்வேறு சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

(Visited 21 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com