சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குனரான காந்தி லலித்குமார் என்பவர் கேகே நகரில் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் நிலானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு பதிலளித்த நிலானி கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசினார். லலித்குமார் மிகவும் மோசமானவர், பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் அவரிடமிருந்து ஒதுங்கினேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் ஆர்த்தி இதுகுறித்தும், நடிகை நிலானி மீது சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ஒரு பெண் என்பவள் அதவும் நடிகை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பெண் தப்பு பண்ணினாலும் தப்புதான், ஒரு நடிகை தப்பு பண்ணாலும் தப்பு தான். ஆனால் ஒரு நடிகை தவறு செய்தால் அது பெரிதாக பரவி விடும். ஒரு நடிகை என்பவள் கண்ணியமாகவும், ஒழுக்கமாவும் இருக்க வேண்டும். அதுவும் இரு குழந்ததைகள் இருக்கிறது. ஒரு நடிகை தவறு செய்தால் அது எல்லா நடிகைக்கும் கெட்ட பெயர் வந்துவிட கூடாது.

இதையும் படிங்க பாஸ்-  சன்னிலியோன் நாட்டின் ஆபாச நடிகை திடீர் தற்கொலையா?

நிலானியின் பேட்டியை பார்த்தபோது, லலித்குமாருக்கு நிறைய பிரபலங்களை தெரியும் என்பதால் எனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். அப்ப ஒருவர் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி உங்களை ஏமாற்றும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு சீப்பா?. அப்போ ஏமாந்து எல்லாரிடமும் போய் விடுகிறீர்களா? என்று காரசாரமாக கூறியிருக்கிறார். அதே போல லலித்குமாருடன் குறும்படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது என்று நிலானி கூறியிருப்பது இது முற்றிலும் மிகபெரிய பொய் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தமிழ் இளம் நடிகை ரியாமிகா தற்கொலை...

நிலானி பார்க்கும் போது எனக்கு பாவமாக தோன்றவில்லை. ஏனெனில் ஒருவர் தப்பு செய்தால் அது அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிஞ்சிவிடும். அந்த நபர் என்ன எப்படியோ என்று தெரியவில்லை. ஆனால் ஒரு உயிர் போய் விட்டது. லலித்குமார் பெண்களை ஏமாற்றுபவர் என்றால் அவர் தன்னுடைய உயிரை விட்டு இருக்க மாட்டார். இந்த பெண் இல்லை என்றால் இன்னொரு பெண் என்று போய் இருப்பார். அதனால் எனக்கு நிலானி மீது தான் தப்பு இருக்கும் என்று தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார் பிக்பாஸ் ஆர்த்தி.