ஆரவ்வுடன் சுற்றுவது ஒவியா இல்லையா? வீடியோ இணைப்பு

oviya

கடந்த பிக்பாஸ் சீசனில் அனைவரது மனத்தை கொள்ளையடித்தவர் ஒவியா. இவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் ரசிகா்களின் மனத்தில் நீங்காத இடம் பெறும் வகையில் இருந்தது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில்கலந்து கொண்ட ஆரவ்வை காதலிக்க தொடங்கினார். ஆனால் அவரது காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்து ஓவியா இந்நிகழச்சியிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடினார் ஆரவ்.பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின் எங்கள் இருவருக்குமிடையில் காதல் இல்லை. நண்பர்களாக இருக்கிறோம். இந்நிலையில் இருவரும் பாங்காங்கில் ஒன்றாக சுற்றி திரியும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது. இது பற்றி ஆரவ் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறைக்காக பாங்காக் சென்றிருந்த போது எடுக்கபட்டது. அது பழைய புகைப்படம் என்று கூறியிருந்தார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். எங்களுக்குள் எந்தவிதமானதும் இல்லை என்றார்.

தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆரவ்வுடன் ஒரு பெண் இருக்கிறார். கேமரா எடுப்பவரை பார்த்து ஆரவ் எடுக்க வேண்டாம் என்று தடுக்கிறார். அப்படி வீடியோ எடுக்கும் போது ஆரவ் பக்கத்தில் இருக்கும் பெண் அவர் பின்னாடி மறைந்து கொள்கிறார். ஆனால் அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஓவியா இல்லை என்பது போல தான் தெரிகிறது.