பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதலே ஆரவ் ஒவியா இரண்டும் பேரும் தான் ஒன்றாக இருந்தாங்கள். ஆரவ் மட்டும் பிக்பாஸ் வீட்டில் ஒவியாவுக்கு ஆதரவாக இருந்து வந்தாா். இதனால் ஒவியா ஆரவ் மீது காதல் கொண்டாா். அதை மறுத்த ஆரவ்வால் மனஉளைச்சலுக்கு ஆளான ஒவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாா்.

ஒவியாவின் காதலை ஆரவ் மறுத்ததற்கு காரணம் தனக்கு ஏற்கனவே ஒரு காதல் இருப்பதாகவும், தனக்காக ஒரு காதலி காத்திருப்பதாகவும் கூறினாா். ஒவியா பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது ஆரவ் ஒவியா காதலை மறுத்த பிறகு, நான் கொடுத்ததை திருப்பிக்கொடு என்று ஒவியா கூறினாா். அதன் பின் வார இறுதியில் நடக்கும் பஞ்சாயத்தில் கமல் ஒவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தத்தை பற்றி அனைவாிடமும் தொிவிக்குமாறு கூறினாா். அதிலிருந்து ஆரவ் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது மருத்துவ முத்தம் தான். அந்தளவுக்கு அந்த மருத்துவ முத்தம் ரிச்சாகி விட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், முதலில் மாடலிங்காகவும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் ஆரவ் நடித்துள்ளாா். சைத்தான் போன்ற ஒாிரு தமிழ் படங்களில் நடித்துள்ளாா் ஆரவ்.

தற்போது ஆரவ்வுடன் ஒரு பெண் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை ஆரவ் கூறிய காதலி தான் அவருடன் போட்டோவில் இருக்கும் அந்த பெண்ணா என்று பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதை ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்பு கூறினால் தான் இதற்கு விடை கிடைக்கும்.