பிந்து மாதவியால் நொந்துபோன தொலைக்காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அறிந்த தொலைக்காட்சி அவருக்கு போட்டியாக ஒருவரை உள்ளே அழைத்து வர தொலைக்காட்சி முடிவு செய்தது. இதனையடுத்து எப்படியாவது மீண்டும் ரசிகர்களை கவர வேண்டும் என்று அந்த தொலைக்காட்சியால் களம் இறக்கப்பட்டவர்தான் பிந்து மாதவி. இவர் பிக்பாஸ் வீட்டில் வந்தவுடன் ஒரு ரசிகர் வட்டமும் உருவானது உண்மைதான். ஆரம்பத்தில் காயத்ரி,சக்தியிடம் கறாராக பேச துவங்கிய பிந்து நாளடைவில் சரண்டர் ஆனார். இதனால் இவர் மீது இருந்த எதிர்ப்பார்ப்பும், நிகழ்ச்சியும் பிசுபிசுத்து போனது.

பிந்து மாதவியால் இனி எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்த தொலைக்காட்சி தற்போது சுஜா, ஹரீஷ் போன்றவர்களை களம் இறக்கியுள்ளது. விரைவில் அவர் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.