உலகநாயகன் கமல்ஹாசன் முதன் முதலாக தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி பிக்பாஸ் சீசன் 1இல் மக்களிடையே பலவித விமர்சனங்களைப் பெற்றவர் கயாத்ரி ரகுராம். நடிகையும், நடன இயக்குநருமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் நேற்று (நவ.24) மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார். சென்னை திரு.வி.க பாலம் பகுதியில் சென்று கொண்டிருக்கையில், காவல்துறையினரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.

இதனையடுத்து, இவருக்கு மூன்றாயிரத்து ஐந்நுாறு ரூபாய் அபராதம் விதித்த அபிராமபுரம் காவல்துறையினர், அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.