தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜகவில் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏனென்றால், அந்த புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. மேலும், அதில் அவர் பதிவு செய்துள்ள இமோஜியும் கர்ப்பத்தை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

ஆனால், கடந்த 2010இல் விவகாரத்தானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த புகைப்படம் காயத்ரி ரகுராம் நடிக்கும் சீரியல் அல்லது படத்தின் வேடம்தான் என ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயத்ரி உண்மையிலேயே கர்ப்பமா? அல்லது அவர் நடிப்புக்கான தோற்றமா இது? என பலரிடம் கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.instagram.com/p/BpoxQUthYOL/?utm_source=ig_web_copy_link

Loading...