இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 வில் டாஸ்க் மிகவும் கடுமையாகவும் கொடுரமாகவும் போய் கொண்டிருக்கிறது. முகத்தில் முட்டை போடுவது, மிளகு தூள் போடுவது, எண்ணைணெய் ஊற்றுவது, தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை போட்டியாளர்கள் செய்கின்றனர். இது பார்ப்பதற்கு சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு போன்று தோன்றுகிறது. அதோடு கண ரணகளமாக இருக்கிறது.

ஐஸ்வர்யா ராணி மகாராணி டாஸ்க்கில் செய்த அடாவடி தனத்திற்கு பதிலடியாக விஜயலட்சுமி திருப்பி அடிக்கும் விதமாக டாஸ்க்கில் நடைபெறுகிறது. நேற்றைய டாஸ்க்கில் விஜயலட்சுமிக்கு அனைத்து போட்டியாளர்களும் வைத்து செய்தார்கள். கோலமாவு, மிளகு பொடி போன்றவற்றை தூவி எரிச்சலடைய வைத்தனர். இதனால் ஐஸ்வர்யாவுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்பதை மனதில் வைத்து விஜயலட்சுமி நிறைய யுக்திகளை கையாண்டார்.

ஃபஸர் மீது கை வைத்து இருக்கும் போது அதில் பருப்பு முட்டைகளை கட்டி தொங்க விடுவது, முகத்தில் தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை விஜயலட்சுமி வைத்து செய்தார். இதை பார்க்கும் பார்வையாளர்களுக்கிடையே அய்யோ பாவம் என்ற பரிதாபம் எல்லாம் ஏற்பட வில்லை பிக்பாஸ். மாறாக விஜயலட்சுமியிடமிருந்து இன்னும் அதிகமாக பார்வையார்கள் எதிர்பார்த்திருப்பது தான் உச்ச கட்டம்.

ஆனால் விஜயலட்சமி இப்படி ஒரே அடியாக ஐஸ்வர்யாவை வைத்து அல்டராசிட்டி செய்தால் பிக்பாஸ் உங்களை நாமினேட் செய்து விடுவார் என்பதை கவனத்தில் வைத்து கொண்டு விளையாடுங்கள் என்பது தான் பார்வையார்கள் மத்தியிலிருந்து அவருக்கு ஒரு அட்வைஸ்.