பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வாரம் தோறும் ஒருவா் வெளியேற்றப்பட்டு வருகிறார். இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்ற படுவதாக செய்திகள் கசிந்துள்ளது. இவ்வளவு நாட்களாக எந்தவித சுவாராசியமும் இல்லாமல் இருக்கிறது என்ற ஒரு கருத்து பார்வையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. 85 நாட்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  சினிமாவில் சீனியர்கள், அரசியலில் ஜூனியர்கள்: கமல்-ரஜினி குறித்து விஜயகாந்த்

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஐனனி, மும்தாஜ், சென்ராயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இனிமேல் புதிய போட்டியாளர்கள் யாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் கட்டாயமாக வெளியேற்றபடுவது உறுதி. எனவே சென்ராயனை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ள ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஓவியாவை நடிக்க வைத்தால் ரூ.100 கோடி வசூல் நிச்சயம்: இயக்குனருக்கு ரசிகர்கள் கொடுத்த உறுதிமொழி

நாம் ஒன்று நினைத்தால், பிக்பாஸ் ஒன்று செய்வார், அதனால் என்ன வேண்டுமானலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பிக்பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்ற ஏதாவது ஒரு யுக்தியை கையாண்டு பார்வையாளர்கள் நினைப்பில் மண்ணை அள்ள போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்!