பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த ஆண்டை போல இந்த சீசன் அமையவில்லை. கடந்த பிக்பாஸ் சீசனில் அனைவரது மனத்தை தொட்டத்தை போல இந்த சீசனில் யாரும் பார்வையாளர்களின் மனதில் இன்னும் இடம்பிடிக்கவில்லை. இந்நிலையில் ஒரிரு சில படங்களில் அதுவும் சின்ன கேரக்டரில் மட்டுமே நடித்த மகத் அந்த பிக்பாஸ் வீட்டில் பண்ணும் அலப்பறைக்கு அளவே இல்லை. எதற்கெடுத்தாலும் சிம்புவை போல பேசுவதும் இருப்பதுமாக தான் பிக்பாஸ் வீட்டில் ராசு பண்ணுகிறார். பின் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா பின்னாடி சுற்றுவதும் தான் மகத்தின் வேலை.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மகத் பாலாஜியுடன் மோசமாக நடந்து கொள்ளுவது போல வெளியாகி உள்ளது. பாலாஜியை உன்னை சொன்னனா என்று ஒருமையில் நீ வா போ என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார். மேலும் காமெடி என்று சொல்லுகிறார். அதற்கு காமெடி என்று சொன்னால் நடப்பதே வேறு என்று பாலாஜி கோபமாக பேசுகிறார். அதற்கு காமெடி தலையா என்று மகத் மேலும் கத்துகிறார்.

அரஅவயண

ஏற்கனவே பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வரும் மகத், எத்தனை கோடி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி என்ற அறிவு கூட இல்லாமல் காட்டு மிராண்டி தானமாக கத்துவது என்று தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். அனைத்து ஹவுஸ்மேட்டுகளிடமும் இப்படிதான் கத்துகிறார் மகத்.

இப்படியே மகத் நடந்து கொண்டிருந்தால் எவிக்சன் லிஸ்ட்டில் பெயர் வரும்போது கட்டாயமாக வெளியேற்றப்படுவது உறுதி.

இப்படி மகத் மற்றும் பாலாஜி இவர்கள் சண்டை போடுவதை மும்தாஜ் சென்ட்ராயன் மட்டும் சமாதானம் செய்து தடுக்கின்றனர். மற்ற அனைத்து போட்டியாளர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்த்து கொண்டிருக்கின்றனர். எனவே இந்த பிக்பாஸ் சீசன் 2 மக்கள் மத்தியில் அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நிச்சியமாக முற்றுப்புள்ளி வைப்பது விரைவில் நடக்கும்.