யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் படத்தை வென்றது யார் தெரியுமா? உள்ளே பாருங்கள்…

100 நாட்களை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றியாளர்? என்பதை அறிவிக்கும் கடைசி நாள் நிகழ்ச்சி இன்று பிக்பாஸ் அரங்கில் கோலாகலமாக நடந்தது. உள்ளே இருந்த நான்கு போட்டியாளர்கள் காலையில் எழுந்திருப்பதற்கு முன்பாகவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆடிப் பாடி உள்ளே சென்றனர். கடைசி போட்டியாளர்களான சினேகன், ஆரவ், கணேஷ் மற்றும் ஹரிஷ் உடன் அவர்கள் ஆடி, பாடி, உரையாடி மகிழ்ந்தனர்.

பின்னர், 4 போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே விட்டுவிட்டு அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அரங்குக்கு வந்தனர். பின்னர், பிக்பாஸ் வெற்றியாளர்கள் ஒவ்வொருவராக அவரது உறவினர்களை விட்டு அழைத்து வரச்சொன்னார் கமல். முதலில், 4-வது வெற்றியாளராக கணேஷ் வெங்கட்ராமை அவரது மனைவி நிஷா வீட்டுக்குள் சென்று அழைத்து வந்தார்.

அடுத்தாவதாக ஓவியாவை அழைத்த பிக்பாஸ், அவரை உள்ளே சென்று ஒரு வெற்றியாளரை அழைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டார். ஓவியா உள்ளே சென்றால் கண்டிப்பாக ஆரவ்வைத்தான் அழைத்து வரச்சொல்லியிருப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், உள்ளே சென்ற ஓவியா, ஹரிஷை மூன்றாவது வெற்றியாளராக வெளியே வந்தார்.

பின்னர், பிக்பாஸ் வீட்டுக்குள் சினேகன், ஆரவ் இருவர் மட்டுமே இருந்தனர். அவர்களை வெளியே அழைத்து வரும் பொறுப்பு கமலுக்கு கொடுக்கப்பட்டது. அவர் உள்ளே சென்று இருவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சி அரங்குக்கு அழைத்து வந்தார். பின்னர், பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளர் பார்வையாளர்களின் கரகோஷம் மற்றும் ஆர்ப்பரிப்புடன் அறிவித்தார் கமல்.

அதில், ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சினேகனுக்கு பிக்பாஸ் முதல் சீசனில் இரண்டாவது இடம் கிடைத்தது. சினேகன்தான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. இதையடுத்து, பிக்பாஸ் வீடு பூட்டப்பட்டது. அடுத்தாவது இரண்டாவது சீசனுக்காக இந்த வீடு மறுபடியும் திறக்கப்படும் என்று அறிவிப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்ற ஆரவ்-க்கு சினிமா ரிப்போட்டர்ஸ்.காம் சார்பில் வாழ்த்துக்கள்.