கோலிவுட்டில் பிரபு மற்றும் பிரபு தேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்தவந்த அவர், பின்பு டான்ஸ் மாஸ்டராகவும் உள்ளார். இதற்கிடையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1இல் கலந்து கொண்ட காயத்ரி மக்களிடையே பல்வேறு விமர்சனங்களை பெற்றார். அதையடுத்து, தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றைய முன்தினம் காயத்ரி ரகுராம் குடித்து விட்டு கார் ஓட்டி போலீஸில் மாட்டிக் கொண்டு அபராதம் கட்டியதாக செய்திகள் வெளியானது.

இதனை மறுத்த காயத்ரி ரகுராம், சமுகவலைதள பக்கத்தில், தான் குடித்து கார் ஓட்டவில்லை எனவும், படத்தின் ஷீட்டிங் முடித்து நண்பரை இறக்கிவிட்டு தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருக்கையில் காவல்துறையினர் வழக்கம்போல் நடத்திய சோதனை தான் அது. பின்பு அங்கிருந்து 10 நிமிடத்தில் கிளிம்பிவிட்டேன் என்றும் மற்றும் சில மீடியாக்கள் தன்னை டார்கெட் செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், காயத்ரின் நெருங்கிய நண்பரான பிக்பாஸ் கஜால் இதனை மறுத்துள்ளார். மேலும், தானும் அவருடன் தான் இருந்ததாகவும், இதெல்லாம் எப்போது நடந்தது என்று கேட்டுள்ளார்.