தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் பலருடைய விமர்சனங்களுக்கு உள்ளானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜகவில் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டரில் கர்ப்பமாக உள்ளது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இவர் கடந்த 2010இல் விவகாரத்தானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த புகைப்படம் காயத்ரி ரகுராம் நடிக்கும் சீரியல் அல்லது படத்தின் வேடம்தான் என ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயத்ரி உண்மையிலேயே கர்ப்பமா? அல்லது அவர் நடிப்புக்கான தோற்றமா இது? என பலரிடம் கேள்வி எழுந்துள்ளது.

இதனையடுத்து, தற்போது அத்தனை கேள்விக்கும் படம் தான் காரணம். ஹரிஷ் உத்தமனுடன் நடிக்கும் ஒரு படத்தில் காய.த்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பதாகவும், இதனையே காயத்ரியே ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Movie is my baby

A post shared by Gayathri Raguramm (@gayathriraguramm) on