Home சற்றுமுன் இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்? ஆதாரம் இதோ…

இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்? ஆதாரம் இதோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் சமயத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து நடிகை சுஜா வருணி வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி முடிவின்போது போடப்பட்ட 45 நொடி புரோமோவில் பிக்பாஸ் வீட்டின் மெயின் கதவு திறக்கப்பட அதன் வழியே மாடர்ன் உடை அணிந்த ஒரு பெண் கையில் பலூனுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். வந்தவர், அனைவரிடமும் கைகுலுக்கி ஒவ்வொருவருக்கும் தான் கொண்டு வந்த பலூனை கொடுக்கிறார்.

இந்த புரோமோவில் காட்டப்படும் அந்த பெண் யார்? என்பதை கடைசிவரை காட்டவேயில்லை. அவர் யாராக இருக்கும்? ஒருவேளை அவரும் ஒரு போட்டியாளராக இருப்பாரோ? என்று பலரது மனதிலும் கேள்விகள் எழுந்து வந்தன. அந்த கேள்விகளுக்கெல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. அந்த புரோமோவில் காட்டப்பட்டவர் நடிகை அஞ்சலி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘பலூன்’ படத்திற்கான புரோமோஷனுக்காக அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, ‘தமிழ் தலைவாஸ்’ கபடி அணி தங்களது அணியை புரோமோஷன் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தது. அதேபோல், ‘கதாநாயகன்’ படத்தின் புரோமோஷனுக்காக அந்த படத்தின் நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகை கேத்ரீன் தெரசா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நடிகை அஞ்சலியும் தான் நடித்துள்ள ‘பலூன்’ படத்தின் புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.