Home சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நாரதர் வேலையை செய்த நடிகர் கார்த்தி! கோபத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் நாரதர் வேலையை செய்த நடிகர் கார்த்தி! கோபத்தில் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது திருடன் போலீஸ் டாஸ்க்கினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கடும்யான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. சென்ட்ராயன் தலையில் தேய்த்து குளிப்பதற்கு எலுமிச்சை பழம் கேட்டு அது பிரச்சனையாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அந்த வீட்டிற்குள் விசிட் அடித்துள்ளார்கள்.

பிக்பாஸ் சீசன் 2 வீட்டிற்குள் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஹீரோ கார்த்தி, இயக்குனர் பாண்டியராஜ், காமெடி நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினர் விசிட் அடித்துள்ளார்கள். படத்தின் புரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்கள்.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் உள்ளே சென்று தங்களால் முடிந்த வரை நல்ல எட்டப்பர் வேலையை செய்துகிறார்கள். ஏற்கனவே பிக்பாஸ் பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கார்த்தி மேலும் கொழுந்து விட்டு எரியும் வகையில் ஒரு வேலையை செய்துள்ளார். அது என்னவென்றால், கார்த்தி வீட்டை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்று அவர் கேட்க, அவருக்கு பதில் அளிக்கும் விதமாக மும்தாஜ் வீடு க்ளீனா இல்லை மன்னிசிருங்க என்று கூறுகிறார்.

அதற்கு கார்த்தி, அதெல்லாம் மன்னிக்க முடியாது… ஊரே பாக்குது என்று கூறிவிட்டார். இதை கேட்டதும் கட்டாயமாக மும்தாஜ் கோபமடைவார் ஏன்னா.. அவர் எதற்கொடுத்தாலும் சுத்தம் சுத்தம் என்று ஹைஜீன் என்று வாய் வலிக்க பேச கூடியவர் பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட் வந்தால் சும்மாவா இருப்பார்.

அப்படி போகட்டும் என்று விடாமல், அடுத்து அடியாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் பட்டப்பெயர்களை கூறிமாறு டேனியலிடம் கேட்டார் இயக்குனர் பாண்டியராஜ். வந்ததற்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால் தன் பங்கிற்கு பாண்டியராஜ் கேட்க, அனைவரின் பெயர்களையும் சற்றும் தாமதிக்காமல் கூற, வைஷ்ணவியை நாராயணா நாராயணா என்று கிண்டல் செய்தார்கள்.

விருந்தாளிகள் முன் சகஜமாக பேசி சிரித்தாலும், அது பற்றி வைஷ்ணவி ஜனனி மற்றும் ரம்யாவிடம் பேசுகிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் வைஷ்ணவி என்பது தெரிகிறது. இதனால் ஏதாவது பிரச்சனை வெடிக்குமா என்பதை பொறுத்திருத்து தான் பார்கக வேண்டும்.