பிக்பாஸ் 2 நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 வீட்டில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்க்க தூண்டியதே கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற காரணத்தால் தான். இதுவரை சின்னத்திரை பக்கமே எட்டி பார்க்காத கமல் முதன் முதலாக இந்த ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் காலடி எடுத்து வைத்தார். உலக நாயகனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களும் உண்டு. அவரது அபாரமான பேச்சு திறமையும், நடிப்பும் மயங்கியே ரசிகா்கள இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது. அதுவும் கமல் வரும் சனி மற்றும் ஞாயிறு டிவி முன்னாடி அமர்ந்து விடும் ரசிக பட்டாளமே உண்டு.

உலக நாயகனும் வார்த்தை விளையாட்டாக மருத்துவ முத்தம், குறும்படம் போன்றவை கேட்கும் ரசிகர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்வதை பார்த்தோம். அதே போல இந்த சீசனில் அவரிடம் அரசியல் தலைவர்கள் உள்பட் பலரும் மாட்டிக்கொண்டு திண்டாட போகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த தடவை நம்ம உலக நாயகன் செம மாஸாக இருக்கிறார். இந்த சீசனில் மிகவும் வித்தயாசமான கெட்டப்போடு அழகாகவும், மாஸாகவும் உள்ளார். முறுக்கு மீசை, தெறி பறக்கும் கண்களோடு நம் முன் வந்து நிற்கும் கமல் பிக் பாஸ் வீட்டை கடந்த சீசனை போல இந்த தடவையும் சுற்றி காண்பிக்கிறார். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள கன்ஃபெஷன் ரூமில் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது.

அதுபோல பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மேடையில் இருக்கும் புகைப்படமும் உள்ளது. பிக் பாஸ் மேடையில் பார்வையாளர்களை உலக நாயகன் வரவேற்கிறார். மேலும் தனது இரு கரங்களையும் விரித்து அனைவரையும் நிகழ்ச்சிக்குள் வரவேற்கிறார். கையில் கட்டியிருக்கும் வாட்ச் பார்த்தபடி டைம்மாச்சு நிகழ்ச்சிக்கு செல்வோமா என கூறியப்படி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.