ரைசா செய்த தவறு ; முட்டையை பறிகொடுத்த பிக்பாஸ் வீட்டினர்

03:27 மணி

பிக்பாஸ் வீட்டில் ரைசா செய்த தவறால், அவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை மற்றவர்களும் இழக்க நேரிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பகலில் தூங்கக் கூடாது என்பது விதிமுறை. அதையும் மீறி தூங்கினால், வீட்டின் தலைவர்கள் அவர்களை எழுப்பி விட வேண்டும். இது இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து நடந்து வரும் ஒரு விவகாரம். சில நாட்களுக்கு முன்பு கூட ரைசா பகலில் தூங்க, அவரை எழுப்பி விடுங்கள் என பிக்பாஸ் கூற, அதை மதிக்காமல் மீண்டும் மீண்டும் தூங்கினார் ரைசா. அதன் பின் அவர அழைத்து பிக்பாஸ் பேச அவரிடம் ரைசா சண்டை போட்டார்.

இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் கடந்த வாரம் சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், புதிதாக வந்தவர்கள் தவிர வேறு யாரிடமும் பேசாமல் சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று வெளியான புரோமோ வீடியோவில், ரைசா பகலில் மீண்டும் தூங்க, அவர் ஏன் பகலில் தூங்கினார் என்பதை மற்றவர்கள் முன்பு விளக்க வேண்டும் என்ற கட்டளையை வீட்டின் தலைவர் ஹரீஸ் படிக்கிறார். ஆனால் அதற்கு ரைசா மறுப்பு தெரிவிக்க, அவரை அழைத்து பிக்பாஸ் பேசுகிறார். அப்போதும், அவரிடம் சண்டை போடும் ரைசா, அப்படி ஒரு விதிமுறையை யாரும் என்னிடம் இதுவரை கூறவே இல்லை என வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருக்கும் முட்டைகளை முகமூடி அணிந்த ஒருவர் எடுது சென்றுவிடுகிறார். ரைசாவின் நடவடிக்கையால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

 

 

 

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com