ஜெயம் ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் – பின்னணி என்ன?

05:06 மணி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த அழைப்பைக் கேட்டு ஜெயம் ரவி தலை தெறிக்க ஓடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது பெரும்பாலோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறியிருக்கிறது. சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதிலும், இந்நிகழ்ச்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஓவியாவிற்கு ஏராளமான ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிக்பாஸ் நிகழ்ச்சியினர். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவே, நீங்கள் நடனமும் ஆட வேண்டும் என அடுத்த கோரிக்கையை வைத்துள்ளனர். அதற்கும் ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் நீங்கள் ஒரு 10 நாளைக்கு இருக்க வேண்டும் என கேட்க, அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவி, நான் இந்த நிகழ்ச்சிக்கே வரவில்லை என கும்பிவிட்டு தலை தெறிக்க ஓடிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com