பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வியாபார களம் டிஆர்பிக்காக அவர்களுக்கு தேவையானதை மட்டும் தான் ஒளிபரப்புவார்கள். உள்ளே என்ன நடந்தது என்பது தெரியாது என பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதன் இரண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும் மக்கள் பொழுதுபோக்கிற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனின் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக் பாஸ் வீட்டிற்குள் கட்டிப்பிடி வைத்தியத்தை பிரபலமாக்கியவர். அவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வியாபார களம் என விமர்சித்துள்ளார். ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சினேகன், பிக் பாஸ் வீட்டில் ஒரு நூறு நாள் வைத்துச் செய்தார்கள். அவர்கள் இஸ்டத்திற்கு செய்தார்கள், அவங்களுக்குத் தேவையானது மட்டும்தான் போட்டார்கள். உள்ள என்ன நடந்தது என்பது தெரியாது. டிஆர்பி, அது ஒரு வியாபார களம் என்றார் அதிரடியாக.