பிக்பாஸ் வீட்டில் ஆரம்ப காலங்களில் டாஸ்க் கொடுக்கப்பட்டால் அதனை போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று வந்தனர். ஆனால் சமீப காலங்களில்  நடப்பதே வேறு. டாஸ்க்கை என்னால் ஏற்க முடியாது என்று பிக்பாஸிடமே முறையிடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுஜாவுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. சுஜா பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஒரு வாரம் ஆன நிலையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது விடிய விடிய நடக்கும் இந்த டாஸ்கில் வீட்டிலிருக்கும் யாரையாவது ஒருத்தரை சுஜா தனக்கு துணையாக தேர்ந்தெடுக்கலாம். அதன் படி சுஜா சினேகனை பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கில் தனக்கு துணையாக தேர்ந்து எடுத்தார்.

கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் சுஜா வருணி, சினேகன் ஆகியோர் இரவு முழுவதும் ஒரு கூடை பந்தை மாற்றி மாற்றி எரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படி செய்தால் சுஜா எலிமினேஷன் லிஸ்டில் இருந்து நீக்கப்படுவார்.

இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் மீது போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.