தன்னை வசைப்பாடுபவர்களுக்கு  உருக்கமான வீடியோ ஒன்னற வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி!

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழ் மூலம் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் ஜுலியானா. நிகழ்ச்சியில் ஒவியாவை பற்றி மற்றவர்களிடம் தவறுதலாக கூறி சிக்கிக்கொண்டார்.இவரின் இந்த செய்கை நிகழ்ச்சி பார்த்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் இவர் 40 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.தற்போது படங்களில் சிறு சிறு வேடம்,சின்னத்திரை தொகுப்பாளினியாகவும் நடித்து வருகிறார். நிகழ்ச்சி முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் ஜூலியை விட்டு வைக்கவில்லை ஒவியா ஆர்மியினர்.

டிவிட்டரில் ஜூலி பதிவிடும் பதிவுகளுக்கு அவரை பலரும் வசைப்பாடி வருகின்றனர்.இதனால் மனமுடைந்த ஜூலி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் , நான் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டேன் . என்னை ஏன் இப்படி வசைப்பாடுகிறீர்கள். நான் உங்களின் அக்காவோ ,தங்கச்சியோ இல்ல . வாழ்க்கையில் ஒரு பொய் கூட சொல்லாத அரிச்சந்திரன் வந்து என்னை குறை கூறட்டும் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன் .செய்த தவறை திருத்தி கொண்டு நான் உண்டு என் வேலை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து இவ்வாறு பேசாதீர்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார்.