Home சற்றுமுன் யாஷிகாவுடன் கும்மாளம் அடிக்கும் மஹத்: முன்னாள் காதலி அதிரடி முடிவு!

யாஷிகாவுடன் கும்மாளம் அடிக்கும் மஹத்: முன்னாள் காதலி அதிரடி முடிவு!

பிக்பாஸ் வீட்டில் உள்ள யாஷிகாவின் மீது சக போட்டியாளரான மஹத் காதல் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மஹத்தின் முன்னாள் காதலி பிராச்சி மிஸ்ரா அவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.

நேற்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவிடம் பேசும் மஹத், தனக்கு யாஷிகா மீது காதல் இருப்பதாக கூறுகிறார். வெளியில் தனக்காக தனது காதலில் காத்திருப்பது நன்றாக தெரிந்தும் யாஷிகா மீது அவருக்கு காதல் வந்துள்ளது. இந்த பிரச்சனையை மஹத் எப்படி சமாளிக்க போகிறார் என்பது அவருக்கே தெரியாமல் புலம்பி வருகிறார்.

அதே நேரத்தில் யாஷிகாவுக்கும் மஹத் மீது காதல் உள்ளது. அவருக்கு வெளியில் ஒரு காதலி இருப்பது யாஷிகாவுக்கு முதல் நாளே தெரியுமாம். இருந்தாலும் மஹத் மீது யாஷிகாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளதாக கூறுகிறார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இப்படி காதலித்து வருவதை உறுதி செய்துகொண்ட மஹத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் காதலியை பிரிவது குறித்து மஹத் பேசிய வீடியோவை இணைத்து, ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

நான் விரும்பிய ஒருவரை அனுப்பி வைத்தேன். நிகழ்ச்சி முடிந்த பின் எங்கள் வாழ்க்கையை தொடங்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். சமூகவலைத்தளங்களில் வெளியான விமர்சனம் காரணமாகவே என் சொந்த வாழ்க்கை குறித்து பேசுகிறேன்.

மஹத் என் மீது காதலில் இருந்தார். நானும் அவரை இப்போதும் காதலிக்கிறேன். மஹத்துடன் நான் தற்போது இல்லை. எனவே மற்றவர்கள் கருத்துகளுக்கு நான் பதில் கூற முடியாது. ஆனால், மஹத்தை நேரில் சந்தித்து இதுபற்றி விவாதிப்பேன். அவர் யாஷிகாவை காதலிக்கிறார் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. எனக்கு இது காயத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இதனால் என் வாழ்க்கை பாதிக்காது. இது என் சொந்த பிரச்சனை என்பதால் என்னிடம் யாரும் எதுவும் கேட்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். என்னை விட்டு விடுங்கள் என பிராச்சி மிஸ்ரா கூறியுள்ளார்.