இன்று வெளியான பிக் பாஸ் முதல் புரோமோ வீடியோவில் பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் வெங்காயத்திற்காக சண்டை போடுவது போல வெளியாகி நெட்டிசன்களின் மத்தியில் வைரலாகியது. தற்போது இரண்டாவது புரோமோ வீடியோவ வெளியாகி உள்ளது. அதில் வீடியோவில் முழுவதுமாக காயத்ரியாகவே மாறியிருக்கிற மும்தாஜை பார்க்க முடிகிறது.

ஒரு நாள் நடக்கும் விஷயங்களை ஒன்றை மணிநேரம் சுருக்கி காண்பிக்கும் நிகழ்ச்சியை விட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் புரோமோ வீடியோவை தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பார்வையாளர்கள். ஏனெனில் அந்தளவுக்கு புரோமோ வீடியோ பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

சற்றுமுன் வெளியான இரண்டாவது புராமோ வீடியோவில் ஜனனி ஐயர் தலைவி என்று கூட பாராமல் அவருடைய பதவிக்கும் மதிப்பு கொடுக்காமல் மும்தாஜ் ஐனனியை பேச விடாமல் அடக்குவது, நித்யாவிடம் சண்டைக்கு மல்லு கட்டி செல்வது, அதுபோல அந்த பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை தன்னுடைய ஆளுமையால் அடக்க நினைப்பது போன்ற காட்சிகளை பார்ப்பது அவரது நாட்டாண்மை தன்மையையும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் காயத்ரியின் குணம் அப்படியே அவரிடம் பிரதிபலிக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது.