கடந்த வாரம் பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேற்ற பட்டார் மும்தாஜ். யாருக்கும் கிடைக்காத ஒன்றை அவரது ரசிகர்கள் அவருக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட மும்தாஜூக்கு அவரது ரசிக பெருமக்கள் ஆர்மிக்கள் ஆரம்பித்தார்கள். மும்தாஜ் ஆர்மிக்கள் ட்விட்டரில் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த மும்தாஜை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மும்தாஜ் ஆர்மிக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பர்டு செய்துள்ளனர். வருகிற 22ம் தேதி திருவள்ளூரில் இருக்கும் கேபிஆர் மஹாலில் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சந்திப்பு பற்றி விவரங்களை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த ரசிகா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம் மும்தாஜ். சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் பேசி இருக்கிறார் மும்தாஜ்.

இப்படியொரு அரிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் இவருக்கு மட்டும் இந்த அதிஷ்டம் அடித்திருக்கிறது. ஒவியாவுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு மும்தாஜூக்கு மட்டும் தான் அமைந்திருக்கிறது. வரும் 22ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலாமாஸ்டர், ஆர்த்தி, மமதி சாரி, வைஷ்ணவி ஆகியோர் வர இருக்கின்றனர்.