Home சற்றுமுன் அடப்பவிகளா…பிக்பாஸ் ப்ரொமோவிலும் பீப் சவுண்டா?

அடப்பவிகளா…பிக்பாஸ் ப்ரொமோவிலும் பீப் சவுண்டா?

நேற்று எவிக்ஷன் நிகழ்ச்சியில் நித்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் பார்வையாளர் எதிர்பார்த்தது யாஷிகா தான் வெளியே அனுப்பப்படுவார் என்று ஆனால் நடந்தது வேற. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. ப்ரொமோ வீடியோவிற்கும் பீப் போடவேண்டிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

இன்று வெளியாகி உள்ள புரோமோவில் மகத் பேசும் போது பீப் போட்டுள்ளார்கள். இந்த பிக்பாஸ் வீட்டில் அதிகமான கெட்டவார்த்தைகளை பேசி வருகிறார்கள். அதிலும் நித்யாவை குறித்து அடிக்கடி கெட்ட வார்த்தை பேசி திட்டி வந்தார் பாலாஜி. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர்வும், நடிகையுமான காயத்ரி ரகுமாம் தான் அடிக்கடி ஹேர் என்ற வார்த்தையை கூறியதால் பார்வையார்களின் வெறுப்பை பெற்றார். இந்த பிக்பாஸ் சீசன் 2வில் சா்வ சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை பேசி வருகிறார்கள்.

மகத் எப்போதும் யாருடானாவது சண்டை போடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறார். முதலில் நித்யாவுடன் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுகிறீா்கள் என்று கூறி சண்டை போட்டார். அதற்கு பிறகு சென்ட்ராயன் உடன் மல்லுக்கட்டினார் மகத். திருடன் போலீஸ் டாஸ்கில் பாலாஜிவுடன் போடா ஜோக்கர் என்றும் நீ என்ன பெரிய காமெடி தலையா என்று கேட்டு சண்டை போட்டார்.

தற்போது வைஷ்ணவி உடன் மகத் சண்டை போடுகிறார். எப்போதும் மகத்துக்கும் வைஷ்ணவிக்கும் இடையே முட்டல் மோதல்கள் தான் அதிகமாக நிகழ்கிறது. வைஷ்ணவியை பற்றி ஜனனியிடம் மகத் பேசும் புரோமோ வீடியோவில் மகத் பேசும் கெட்ட வார்த்தைக்கு பீப் போட்டுள்ளார் பிக்பாஸ்.