விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக ஐஸ்வர்யா ஷாரிக் இருவரது நடவடிக்கைகள் குறித்து உடன் இருக்கும் போட்டியாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பொன்னம்பலம் நேற்று கமல்ஹாசனிடம் இது குறித்து கூற முயன்றார். ஆனால் கமல்ஹாசன், நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் புரமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பொன்னம்பலம் ஐஸ்வர்யாவிடம் ஏதோ கேள்வி கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா கடும் கோபம் அடைந்து துணிகளை வீசி எறிந்து பொன்னம்பலத்திடம் சண்டையிடுகிறார். இந்த புரமோவை பார்க்கும்போது ஏதோ மோசமான கேள்வியை ஐஸ்வர்யாவிடம் பொன்னம்பலம் கேட்டிருக்கலாம் என தெரிகிறது. எது எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்த்த தருணம் இது தானே….