Home சற்றுமுன் இப்படியே செஞ்சிட்டு இருந்தால் அடிதடியில் தான் போய் முடியும்: ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் மகத்

இப்படியே செஞ்சிட்டு இருந்தால் அடிதடியில் தான் போய் முடியும்: ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பாக புரோமோ வீடியோ வெளியாகி வரும். நிகழ்ச்சியை விட புரோமோ வீடியோ தான் ரசிகா்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யாவிடம் இப்படியெ பண்ணிக்கிட்டு இருந்தால் கடைசியில் அடிதடியில் போய் முடியும் என்று மகத் எச்சரிக்கை செய்கிறார்.

ஐஸ்வர்யா பார்ப்பதற்கும், பேசுவதும் வைத்து பார்க்கும் போது குழந்தை மாதிரி தெரிந்தாலும் ஆனால் ரொம்ப ஓவராக தான் நடந்து கொள்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் நடந்து கொள்ளும் விதம் பயங்கரமாக இருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் ரொம்பவும் அடம்மண்டாக இருக்கிறார். மேலும் இவரை பிக்பாஸ் இந்த வீட்டிலிருந்து வெளியே அனுப்ப மாட்டார் என்ற நம்பிக்கையிலும் ரொம்ப கவர்மாக இருக்கிறார்.

எனக்கு எல்லாம் இப்ப தான் தெரிகிறது. அதனால் பாலாஜியை வெச்சு செய்வேன் என்று கூறிய ஐஸ்வர்யா, குப்பை தொட்டியை எடுத்து அதை பாலாஜி மீது கொட்டுகிறார். ஆனால் எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. இப்படி தான் முதல் ப்ரோமோ வீடியோவில் உள்ளது.

அதன் பிறகு இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் பாலாஜி படுத்திருக்கிறார். சென்றாயன் அவரிடம் வந்து எழுந்திருக்குமாறு கூறுகிறார். அப்படி மாமா நீங்கள் எழுந்திருக்க வில்லை என்றால் தண்ணீர் ஊற்றி விடுவார்கள் என்று கூறுகிறார். பாலாஜி பொறுமையாக வேண்டுமென்றால் ஊற்றட்டும் என்று கூறுகிறார்.

இந்நிலையில் டேனியலிடம் பேசும் ஐஸ்வர்யா, பாலாஜி ரொம்ப அடமென்ட்டாக நடந்து கொள்கிறார். அப்ப்டி அவர் நடந்து கொண்டால் நான் டபுள் அடமென்ட்டாக நடந்து கொள்ளுவேன் என்று கூறுகிறார். அதன்பின் அவர் இப்படியே செய்து கொண்டு இருந்தால் மூஞ்சியில் ஸ்பிரே அடிப்பேன் என ஆவேசமாக பேசினார். இதை பார்த்த மகத், இப்படி நீ செய்தால் அது கடைசியில் அடிதடியில் தான் போய் முடியும் என்று கூறினார்.

மகத் கூறியதை கொஞ்சம் கூட செவி கொடுத்து கேட்காத ஐஸ்வர்யா இரண்டு கரண்டிகளுடன் சென்று , பாலாஜியை அந்த கரண்டியால் தட்டி கொண்டு தொந்தரவு செய்கிறார். ஒரு சின்ன பொண்ணு இப்படியா நடந்து கொள்ள வேண்டும். தலைவர் பதவி கிடைத்து விட்டால் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆணவமாக நடந்து கொள்ளலாமா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலாஜியின் அப்படி என்ன தான் தவறு செய்திருந்தாலும், அவருடைய வயது என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒவராக தான் ஐஸ்வர்யா ஆட்டம்
போடுகிறார் என்கின்றனர்.