பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் ஆண் போட்டியாளர்கள் எஜமான்களாகவும், பெண் போட்டியாளர்கள் சோலை அணிந்து கொண்டு சேவை செய்யும் வேலைக்காரர்களாகவும் மாறி வேலை செய்ய வேண்டும். அப்போது தான் லக்சரி பட்ஜெட் 1600 பாயிண்டுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் வேறு வழியில்லாமல் இந்த டாஸ்க்கிற்கு ஒத்துக்கொண்டனர் பெண்கள்.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவில் மும்தாஜ் சரியாக வேலை செய்த காரணத்தால் அவரிடம் மஹத் கூற மும்தாஜ் கோபப்படுகிறார். மும்தாஜ் எவ்வளவு நேரம் டீலே பண்ணுகிறீர்களோ அவ்வளவு நேரம் நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய வேண்மு் என்று ஹாரிக் கூறுகிறார். அதற்கு மும்தாஜ், நான் அதை செய்ய முடியாது என்று மறுக்கிறார்.

அதுபோல ஆண் எஜமான்கள் பெண்களிடம் தங்களுக்கு ஊட்டி விடுமாறு சொல்கிறார்கள். மும்தாஜ் மஹத்திற்கு ஊட்டி விடுகிறார். மேலும் சென்ட்ராயனுக்கும் ஊட்டி விடுகிறார். தற்போது இரண்டாவது புரோமோ வீடியோவில் ஊட்டி விட சொல்வது தவறு என வைஷ்ணவி கூற மும்தாஜூம் அதையே தான் கூறுகிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா இருவரும் மஹத்துக்கும், ஹாரிக் ஊட்டி விடுவதில் சிரமம் இல்லை. ஆனால் சென்ட்ராயனுக்கு ஊட்டி விடுவதில் அந்த கம்பட்டாபிள் இல்லை என்று மும்தாஜ் சொல்வதாக மஹத் கூறுகிறார். அதற்கு சென்ட்ராயன் என்னிடம் வந்து அப்ப நான் என்ன அவ்வளவு அடிமட்டவனாக ஆகிவிட்டனா என்று கேட்பதாக மஹத் கூறுவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Loading...