bigg boss

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் எஜமான்களாகவும், பெண போட்டியாளர்கள் வேலையாளர்களாகவும் இருக்குமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பெண்களுக்கு படுப்பதற்கு கட்டில் போட்டு தனியாக ரூம் கொடக்கப்பட்டது. இதில் மும்தாஜ் அது செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன் என்று தகராறு பண்ணினார். இதில் பஞ்சாயத்தும் நடைபெற்றது. அதுபோல பெண் போட்டியாளர்கள் ஊட்டி விடுவதும் நடைபெ்றறது. அதில் சென்ட்ராயனுக்கு ஊட்டி விடுவது கம்ப்டப்பூளாக இல்லை என்று பெண்கள் கூறினார்கள். அதற்கு மஹத் சென்ட்ராயன் கூறியதாக நான் மட்டும் இளக்கரமா என்று கேட்டதாக சொன்னார். இப்படி பல பஞ்சாயத்துக்கள் நடைபெற்றது.

balaji

இந்நிலையில் தற்போது இன்றைய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நித்யா தாடி பாலாஜியை தம்பி என்று அழைப்பது போலவும், அவரிடம் மேக்கப் கண்ணாடி பிடிக்க சொல்லுவது போலவும், பிறகு தம்பி அக்காவுக்கு டீ கொண்டு வர சொல்லுவதும், டீ கொண்டு வந்து பாலாஜி கொடுத்ததும் தம்பி டீ சூடாக இல்லை, சூடாக கொண்டு வருமாறு திரும்ப அலைகழிப்பது போலவும் வெளியாகி உள்ளது. இதனால் தாடி பாலாஜி செம கடுப்பாவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய புரோமோ வீடியோவை பார்த்ததிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் வேலையாளர்களாகவும் மாறி செயல்படும் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்திருப்பார் என்பது புலப்படுகிறது.