பிக்பாஸ் மேடையில் கமலை நோஸ்கட் செய்த ரம்யா

nsk ramya

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று ரம்யா வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றமே பிக்பாஸ் தான் செய்துள்ளார் என்று ரசிகா்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த வாரமும் இது போன்று தான் நடைபெற்றது. நித்யாவை யாரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற ஓட்டு போடவில்லை. ஆனால் பாலாஜி மனைவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டதற்கு பல எதிர்ப்புகள் ரசிகா்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இந்த கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரம்யா பிக்பாஸ் மேடையில் கமலை சந்தித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நபர் கமலை சந்திக்கும் அவர்களுக்கு வித்தயாசமான டாஸ்க்க கொடுக்கப்படும். அதுபோல ரம்யாவுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

விளையாட்டுப் பொருட்கள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு எது சரியானது என்று தேர்வு செய்து அதை அவர்களுக்கு பொருத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு பொருளாக எடுத்து ரம்யா ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் வைத்தார். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் வைக்கும் போது அதற்கான காரணத்தையும் சொல்லியபடி வைத்தார். அப்படி வைத்த போது வைஷ்ணவிக்கு கூலிங் கிளாஸ், ரித்விகாவுக்கு கண்ணாடி, பொன்னம்பலத்திற்கு டாக்டர் செட், மகத்துக்கு தூங்குமூச்சி எமோஜி பொம்மை மும்தாஜுக்கு அழுமூச்சி பொம்மை என ஒவ்வொரு காரணம் சொல்லி வைத்தார்.

ramya1

அப்போது ஜனனிக்கு அழகு மீது அதிக கவனம் கொண்டவர் என்ற பொம்மையை வைத்தார் ரம்யா. எப்போதும் அழகின் மீது கவனம் கொண்டவர் அல்ல. அவர் மேக்கப் இல்லாமலேயே பார்ப்பதற்கு அழகாக எப்போதும் இருப்பார் என விளக்கம் அளித்தார். அந்த ஜாலி டாஸ்க் விளையாட்டை மற்ற போட்டியாளர்களுக்கு அகம் டிவி வழியாக காண்பித்தார் கமல். ஜனனியை பற்றி அழகின் மீது கவனம் கொண்டவர் என்று ரம்யா கூறியதாக கமல் கூறினார். அதற்கு ரம்யா தான் அப்படி கூறவில்லை என்றார்.

கமல், ரம்யா இப்போது மாற்றி பேசுகிறார் என்றார். உடனே பதிலளித்த ரம்யா நான் அப்படி கூறவில்லை உண்மைதானே என பார்வையாளர்களையும் சாட்சிக்கு அழைத்தார். அதற்கு அனைவரும் ஆம் எனக் கூற கமலுக்கு என்னவோ போல ஆகி விட்டது. அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.