நேற்று பிக் பாஸ் சீசன் 2வின் முதல் டாஸ்க் தொடங்கியது. அதை பொன்னம்பலம் வாசித்தார். வீட்டில் என்வெலப்புகள் ஒளித்து வைக்கப்படும் அதை தேடி எடுக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டின் முதல் வார தலைவராக போட்டியிடுவதில் கலந்து கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

பாஸர் ஒலி கேட்டவுடன் அனைத்து போட்டியாளர்களும் அதை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் பகுதியில் வந்து தேட வந்த சென்ட்ராயனை நடிகை மும்தாஜ் லேடிஸ் உடைகளை ஆண்கள் தொட கூடாது என்று சண்டைக்கு வந்தார். அப்ப எப்படி தேட முடியும் என்று கூறியவாறு சென்ட்ராயன் சென்று விட்டார். ஆனால் அந்த என்வலப் மும்தாஜ் வசம் தான் கிடைத்தது. இதனை பார்த்த மற்ற ஆண் போட்டியாளர்கள் சென்ட்ராயன் போய் தேடி இருந்தால் அவருக்கு தான் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.

சென்ட்ராயன் என்னப்பா இந்த பொண்ணு இப்படி கூறுகிறது. லேடிஸ் ஆடைகளை தொட கூடாது என்று மும்தாஜ் கூறியதை பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பேசினார். ஆனாலும் ஒருவகையில் மும்தாஜ் கூறியது சரி என்றாலும் அதை சொன்ன விதம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.

ஆனால் தலைவர் போட்டியில் ஜனனி ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்தாஜ் தோல்வி அடைந்தார். பின் கிளீன் டீம், குக்கிங் டீம், வாசிங் டீம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் சமையல் டீம்மின் தலைவராக மும்தாஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல எவிக்ஷன் தேர்வில் மும்தாஜ் பெயரை பிற போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தார்கள்.