கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் அந்த நிகழ்ச்சியல் செய்த சர்ச்சைக்குரிய செயல்களால், மக்களிடையே மிகுந்த விமர்சனங்களைப் பெற்றார். அதையடுத்து, வெளியேவந்த அவர் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வந்தது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  நீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது! ஆவேசமான வைஷ்ணவி

இந்நிலையில், ஐஸ்வர்யாவுடன் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான மஹத் இணைந்து நடிக்கவுள்ளதாக ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அப்படத்தில், மஹத் வடசென்னை இளைஞராகவும், ஐஸ்வர்யா தத்தா பணக்கார வீட்டு பெண் போலவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபு ராம் என்ற புதுமுகு இயக்குநர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.