வேறு சேனலுக்கு கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2?

12:33 மணி

ஹிந்தியில் சக்க போடு போட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த வருடம் தமிழுக்கு முதன் முதலாக வந்தது. இந்த நிகழ்ச்சசியானது பல்வேறு விதமான சா்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுவும் இதை முன்னணி நாயகனாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றவுடன் பெரிய அளவில் ரசிகா்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிறியவா் முதல் அனைத்து தரப்பினரையும் மற்றும் டிவி பார்க்காதவா்களை கூட கமலுக்காக இந்த நிகழ்ச்சி தன்பக்கம் இழுத்து வந்தது. அதுவும் சனி மற்றும் ஞாயிறு கமல் வருகிறார் என்பதற்காகவே டிவியின் முன் அமா்ந்து விடுவார்கள் ரசிகா்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியால் சேனலின் டிஆா்பி ரேட் அதிகரித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வந்தன. சீசன் 2யை பிரபல நடிகா் சூா்யா தொகுத்து வழங்குவதாகவும் அல்லது அரவிந்த்சாமி தொகுத்து வழங்க இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது வேறு சேனலுக்கு கைமாற இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த சேனலின் அடுத்த தொடங்கமாக உள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மற்ற மொழிகளில் கலர்ஸ் சேனல் மூலமாக தான் ஒளிபரப்பி வருகிறார்கள்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com