ஜூன் 17 முதல் பிக்பாஸ் 2 ரசிகா்கள கொண்டாட்டம்

பிக்பாஸ் சீசன் 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தவா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 2வையும் கமல் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. அதுபோல வருகிற 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2வின் புரோமொ வீடியோவின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. புரோமொ வீடியோ ஸ்ட்டிங்கில் கமல் கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்தது. ஆரவ் வெற்றி பெற்றார். இதில் கலந்துக்கொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்கப்பெற்று நடித்து வருகின்றனர்.ஒவியா ஆர்மி என்று வலைத்தளங்களில் ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமடைந்ததார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் 2வையும் கமல் தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூன் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஆண்டு ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பு இன்றி அங்கு வசிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் 100 நாட்கள் பார்க்க வைத்தது. பிக்பாஸ் சீசன் 2வும் அந்தளவுக்கு இருக்கும். என்னவென்றால் தற்போது அரசியலில் களம் இறங்கி உள்ள கமலின் அரசியல் கருத்து அனல் பறக்கும். எனவே பிக்பாஸ் 2 நல்ல சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 17ஆம் தேதி தொடங்க உள்ள பிக்பாஸ் 2வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.