நாளை தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 2வில பங்கு கொள்ள போகும் போட்டியாளர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே பவர்ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ், தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா என தகவல் கசிந்தது. இந்நிலையில் தற்போது ஒருவர் பெயர் வெளியாகி உள்ளது. அவர் அஜித், விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது கூடுதலான செய்தி. அவர் யாரென்று பார்ப்போம்.

கடந்த தாண்டை போல இந்ததாண்டும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்க உள்ளதால் நிகழ்ச்சியானது அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகா்கள் ஆவலாக உள்ளது. இந்த போட்டியில் 15 பிரபலங்கள், 40 கேமராக்கள் நல்லவர் யார் கெட்டவர் என்று கமல் கூறும் புரோமோவோடு தொடங்குகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் புரோமோவில் கமல் மொபோலை பார்த்தவாறு சில விஷயங்களை கூறியிருப்பார். அதில் இவர் இருக்கிறாரா என்று கூறியவாறு சிரிப்பார். அதிலிருந்து அந்த பிரபலங்கள் யார் என்று தெரியவந்துள்ளது. பவர்ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ், ஜனனி ஐயர், யாஷிகா ஆனந்த், மஹத். இதில் மஹத் மங்காத்த படத்தின் அஜித்துடன் நடித்தன் மூலம் அறிமுகமானவர். ஏற்கனவே சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்இ ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துள்ளார்.