பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஷாரிக் தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட அனைவரும் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஆனால், ஷாரிக்கிற்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷாரிக் ஏற்கனவே நடிகர் ஜு.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த பென்சில் படத்தில் இவர் இளம் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன்பின்பு அதே போன்ற வேடமே தொடர்ந்து வந்ததால், அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், தற்போது அவருக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தின்லிங்கா அடுத்து இயக்கும் புதிய படத்தில் ஷாரிக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு உக்ரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஷாரிக்கிற்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்க இருக்கிறார்.