கமல் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 2 தற்போதிலிருந்து எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. அதுவும் கமல் செல்போனை பார்த்து பார்த்து இவர் இருக்கிறாரா? என்று சொல்லி சிரிப்பதிலிருந்து அந்த நபர் யாராக இருக்கும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 வரும் 17ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. பூந்தமல்லியில் போட்ட பட்டுள்ள பழைய செட்டை புதிய கோணத்தில் கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். கன்சக்ஷன் ரூம் கதவை மாற்றி உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் என்ற கேள்வி மக்கள் மனதில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் தான் பிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல் சிரித்தபடி இவர் இருக்கிறாரா என்று சொல்லியது யார் தெரியுமா? நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் தான். ஏற்கனவே இவர் முதல் சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வந்தது. ஆனால் தற்போது தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளராக தாடி பாலாஜியும் அவரது மனைவியும் தோ்வாகி உள்ள நிலையில் பவர் ஸ்டார் களம் இறங்க உள்ளது ரசிகா்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டி உள்ளது.

கண்ணா லட்டு தின்னா ஆசையா படத்தின் மூலம் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய பவர் ஸ்டார் பிக்பாஸ் வீட்டில் செய்யும் ரகளை காண கோடிடான கோடி ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.