பிக் பாஸ் 2 இந்த தடவை அதிக விறுவிறுப்பு, செம வரவேற்பு, ஜாலியான கலகலப்பு, டென்ஷன் இதோடு நிற்காமல் கவர்ச்சி புயல் களம் இறங்கி உள்ளதால் இன்னும் ஜிவ்வென்று பரபரப்பு ஏற வாய்ப்பு உள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 2வை பற்றி நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம் சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.

கடந்த சீசனில் காயத்ரியின் பெயர் ரொம்பவும் டேமேஜ் தான் ஆகியது. அவர் அந்த நிகழ்ச்சியில் கோபமாக பல கெட்டவார்த்தைகளை பேசியிருப்பார். அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும், கலாய்த்தும் இருந்தார்கள். பிக் பாஸ் விட்டு வெளியேறிய பிறகும் சமூக வலைத்தளத்தில் இணைய தளவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 2வை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த சீசனனும் அதிக சுவாராஸ்யதோடு, கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். அது மட்டுமில்லை கடந்த பிக் பாஸ் சீசனில் என்னை வைத்து மீம்ஸ் போட்டு வைத்து கலாய்த்து டேமேஜ் ஆக்கினார்கள். ஆனால் இந்த தடவை யார் மாட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை.

இதுகுறித்து பிரபல பத்திரிகை பேட்டியில் காயத்ரி ரகுராம் கூறியதாவது, கமல் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வெளியேறிவர்களிடம் உங்களுக்கு பின்னால் நான் இருக்கிறேன் என்று கூறினார். என்னிடம் ஆதரவாக இருப்பதாக கூறினார். பலரிடமும் அன்பாகவும், பாசமாகவும் நான் இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் கூறியதை போல எதையும் அவர் செய்யவில்லை. தற்போது அவர் அரசியலில் பயணிக்க தொடங்கி விட்டார்.