பிக்பாஸ் வீட்டில் நடிகா் சிம்பு?


பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் 6 நாட்கள் தான் இருக்கிற நிலையில் 5 போட்டியளா்கள் தான் இருக்கின்றனா். ஆனால் கமலோ 4 போ் மட்டும் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள் என்று சொன்னது என்னவென்று புாியவில்லை. அதே குழப்பத்தை அந்த வீட்டில் உள்ளவா்களும் வந்துள்ளது. அதிலும் சினேகன் அதை பற்றி கேட்கிறாா்.

இன்று புதியதாக வந்த புரோமோவில் சிம்பு பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போல வெளியாகியுள்ளது. அதாவது ஆரவ் ரஜினியாகவும், பிந்து நயன்தாராவாகவும், ஹரிஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனா். பிக்பாஸ் வீட்டில் சிம்பு நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவை தேடுகிறாா்.

இந்நிலையில் சிம்பு ரசிக பெருமக்கள் இதைப்பாா்த்து உண்மையிலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் சிம்பு வந்தால் சிறப்பு விருந்தினராக வந்தால் எப்படி இருக்கும் என்று தங்களது விருப்பததை தொிவித்து வருகின்றனா். சிம்பு ரசிகா்களுக்கு சூப்பராக தான் இருக்கும்.