Home சற்றுமுன் நடக்குது என்னான்து தெரியாம டீக்கும், பாத்ரூம்க்கும் அடிச்சிட்டு இருப்பாங்க! யார் தெரியுமா

நடக்குது என்னான்து தெரியாம டீக்கும், பாத்ரூம்க்கும் அடிச்சிட்டு இருப்பாங்க! யார் தெரியுமா

சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அரசியல் மட்டுமல்லாது அனைத்து விஷயங்களை பற்றி தனது கருத்துக்களை பதிவிட்டி வருவரு வழக்கம். ரசிகர்களின் கேள்விகளுக்கும் தக்க பதிலடி கொடுத்து விடுவார். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் தொடர்பான செய்தியை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவர் ஒரு கருத்தை தனது வலைத்தளப்பக்கத்தில் மிகவும் காரசாரமாக பதிவிட்டிருக்கிறார். அதாவது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவை பற்றி பெயர் தெரிவிக்காமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அது என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் அவர் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சயில் டாஸ்க்குள் கொடுக்கப்ட்டு இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். ப்ளு டீம் ஒன்று இன்னொன்று மஞ்சள் டீம் என்று இரு அணிகளாக பிரிக்கப்ட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி தோல்வி அடைந்த அணியினர் என்ன சொல்கிறார்கள் அதன்படி நடக்க வேண்டும் என்பது சட்டம்.

அப்படி அவர்கள் பாத்ரூம்முக்கும், சமையல் அறைக்கும் சண்டை போட்டு அடிச்சிகிட்டு இருங்காங்க. மும்தாஜ் நான் தான் டீ போட்டு குடிப்பேன் என்று அடிக்காத குறையாக அடம்பிடிக்கிறார். ஆனால் சமையல் அறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கம் நீலநிற அணியினர் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது கருணாநிதி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்கள் இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம அங்க இருக்குற போட்டியாளர்களில் ஒரு டீம், பாத்ரூம்க்கும், சமையல் அறைக்கும் அடிச்சிட்டு இருப்பாங்க அதுவும் ஒரு எபிசோடு ஆகும் என ட்வீட் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநதி கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இருக்கிற இந்த நேரத்தில் தமிழகமே மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் கலக்கத்தில் இருக்கும் பட்சத்தில், இதை மனதில் வைத்து கொண்டு தான் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்துள்ளார்.