தமிழ் பிக்பாஸ் சீசன் 2 அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு அதில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி தான் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு வரவேற்பு பெற காரணம் ஒன்று உண்டு என்றால் கமல் ஹாசன் தான். இவர் தொகுத்து வழங்குவதால் தான் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சீசன் 2வையும் அவரே தான் தொகுத்து வழங்குகிறார். கட்சியை தொடங்கிய நிலையிலும் பிசியான நேரத்திலும் கூட இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது மக்களிடையே இன்னும் விறுவிறுப்பை கூட்டி உள்ளது.

பிக் பாஸ் நிர்வாகம் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகும் பிரபலங்களின் பெயர்களை கசிய விடாமல் பாதுகாத்து வைத்துள்ளார்கள். ஆனால் அவ்வப்போது பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபர்களின் பெயர்கள் கொண்ட அட்டவணை வெளியாகி கொண்டே இருந்தது.

இந்நிலையில் கட்டி பிடி.. கட்டிபிடி.. கவர்ச்சி புயல் மும்தாஜ் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர்களின் மனத்தை கொள்ளையடித்த இந்த அழகு கவர்ச்சி புயலுக்கு பிக் பாஸ் முதல் சீசனில் அழைப்பு வந்துள்ளதாம். ஆனால் அவர் அப்போது அதை மறுத்து விட்டார். தற்போது இந்த நிகழ்ச்சி வந்துள்ளதற்கு காரணம் ஒவியா மற்றும் பரணி உள்ளிட்ட பலருக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்து சினிமாவில் மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் இதில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார் என்ற தகவல் அவரது நட்பு வட்டத்திலிருந்து பேசப்படுகிறது.