bigg boss2

பிக்பாஸ் ப்ரொமோ வீடியோவில் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மிகவும் கடுமையானதாக உள்ளது.

இன்றைய ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரத்திற்கான தலைவா் தேர்ந்தெடுக்கும் போட்டி சற்று வித்தயாசமாக உள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்களை சங்கிலியால் கட்டி வைத்துள்ளார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் எனில் அந்த சாவி நீச்சல் குளத்தில் இருக்கும். அதை எடுத்து வந்து அவர்களை சங்கிலிருந்து முதலில் யார் விடுவிக்கப்படுகிறார்களா அவர்கள் தான் இந்த வார வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பாலாஜி, மகத், ஷாரிக் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர். சாவி நீச்சல் குளத்திலிருந்து எடுப்பவர்களாக ஜனனி, சென்ட்ராயன், யாஷிகா பங்குகொள்ளுகிறார்கள். மற்ற போட்டியாளர்கள் அவர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார்கள். இதில் சென்ட்ராயனை சாவியை எடுக்க காரணத்தால் அவரை பார்த்து மகத் போடா பக்கி என்று திட்டுகிறார்.

Loading...