இன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்: வெளியேறியவர் இவர்தான்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருந்து ஒருவரை வெளியேற்ற வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமையில் கமல் வந்து அறிவித்த பின்னர்தான் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அப்படியிருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்றே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவரை வெளியேற்றவிருக்கிறார்கள். இதற்கான புரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் நள்ளிரவில் போட்டியாளர்கள் அனைவரையும் கார்டன் ஏரியாவில் நிற்கவைத்து அவர்கள்மீது ஒளியை பாய்ச்சி தப்பித்துக் கொண்டவர்களை அறிவிக்கிறார் பிக்பாஸ்.

அதில், சினேகன் தப்பித்துக் கொண்டதாக அறிவிக்கிறார். இதிலிருந்து, சினேகன் இறுதிப் போட்டி வரை செல்வார் என்பது உறுதியாகிவிட்டது. இருந்தாலும், அந்த புரோமோவின் கடைசியில் ஒரு நபரின் சூட்கேசை ஆரவ் தூக்கிக் கொண்டு செல்வதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னால், கணேஷ், ஹரிஷை தேற்றிக் கொண்டே நடந்து வருவதுபோலவும் காட்சிகள் அமைந்துள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது, இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஹரிஷ்தான் என்பது நமக்கு தெரிகிறது. இருந்தாலும், இன்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போதுதான் யார் வெளியேறப் போகிறார்கள்? என்பது 100 சதவீதம் உறுதியாகும். ஹரிஷ் வெளியேறிவிட்டால், மீதம் சினேகன், ஆரவ், பிந்துமாதவி, கணேஷ் வெங்கட்ராம் என 4 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு வருவார்கள். அவர்களில் யார் பட்டத்தை வெல்லப் போகிறார்கள் என்பதை அறிய இன்னும் 3 நாட்கள் காத்திருப்போம்.