பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளார் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுக்கும் சினிமாவிலும், விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் தற்போது ஓவியாதான் டாப்.

ஓவியாவுக்கு சினிமா வாய்ப்புகளும், விளம்பரப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில்கூட பிரபல ஜவுளிக்கடையை திறந்து வைப்பதற்கு இவர் வாங்கிய தொகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி எவ்வளவு தொகை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் அதற்கு வாங்கிய தொகை எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.5 கோடி. திறந்து வைப்பதற்கு மட்டுமல்ல, அந்த கடையின் விளம்பரத்திலும் நடித்துக் கொடுப்பதற்காக ஓவியாவுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துவிட்டு வந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்தான் பரிசுத் தொகை. ஆனால், பாதியிலேயே வெளியேவந்த ஓவியாவுக்கு பணத்துடன் வாய்ப்புகளும் குவிந்தவண்ணம் இருக்கிறது. அதேபோல், படங்களிலும் இவர் கேட்கும் சம்பள தொகையை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கேட்கும் சம்பளத்தில் கொஞ்சம் குறைந்தாலும் ஏதாவது காரணம் சொல்லி படத்தை நிராகரித்து விடுகிறாராம் ஓவியா.