nithya

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நித்யா வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் ஓட்டு என்பது பெயர் அளவில் தான் இருக்கிறது. மக்கள் ஓட்டு போட்டு நித்யாவை காப்பாற்றி தான் வருகிறார்கள். ஆனால் பிக்பாஸ் காப்பாற்றியதோ யாஷிகா தான். ஏன் என்று தெரியவில்லை பிக்பாஸ் ஓட்டு என்பதை பெயரில் அளவில் வைத்து விட்டு அவரே ஒருத்தரை எவிக்ஷன் செய்து விடுகிறார். அதற்கு ஏன் மக்கள் ஒட்டு என்று வைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் எவிக்ஷன் லிஸ்டில் யாஷிகா பெயர் வந்தவுடன் அவருக்கு குறைவான ஓட்டுகள் விழுந்தன. எனவே அவர் தான் கடந்தவாரம் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் நித்யாவை வெளியேற்றியது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் யாஷிகாவுக்குத்தான் குறைந்த வாக்குகள் பதிவாகி உள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அப்படி இருக்கும் போது யாரும் எதிர்பாரத வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து நித்யா வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

yasika

எதற்காக பிக்பாஸ் இரட்டை வேடம் போடுகிறார்? என்ன காரணத்திற்காக யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றி உள்ளார் என்று இணையததளத்தில் நெட்டிசன் கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கவர்ச்சியான உடைகளில் பிக்பாஸ் வீட்டில் வலம் வருவதால் இன்னும் சில நாட்கள் ரசிகா்களின் கவனத்தை ஈர்த்து விடலாம் என்ற நப்பாசையில் தான் இப்படி நடந்துள்ளதா? என்று தெரியவில்லை.

பிக்பாஸ் வீட்டில் முதலில் நித்யா கோபமாக நடந்து கொண்ட காரணத்தால் பார்வையாளர்களின் வெறுப்பை பெற்றாலும் அதன் பிறகு மனம் மாறி அனைவரது மனத்திலும் நல்ல பெயரை சம்பாதித்து விட்டார் நித்யா. ரம்யா இதுகுறித்து கூட நேற்று நிகழ்ச்சியில் பேசியிருந்தார். ஆனால் யாஷிகாவும், மகத்தும் மக்களிடத்தில் அதிக வெறுப்பை பெற்று வருகிறார்கள். இதனால் தான் பார்வையாளர்கள் யாஷிகாவிற்கு குறைவான வாக்குகள் மூலம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்த வாக்குபதிவுகளை எல்லாம் தாண்டி யாஷிகா எப்படி காப்பாற்றப்பட்டடார் என்று பார்வையாளர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.