சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையிலும் கால் பதித்து வருகின்றனர். முதலில் சின்னத்திரை நடிகர்கள் தான் அதிகளவில் பெரிய திரையில் கால் பதித்து வந்தனர். தற்போது எல்லாம் சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமைடந்த ப்ரியா பவானி சங்கர் கோலிவுட்டில் ஹீரோயினாக அவதாரம் பூசினார். அவர் மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்தார். அவரை தொடர்ந்து தற்போது தெய்வமகள் சீரியல் புகழ் நாயகி வாணி போஜன் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

சன் டிவியல் 8மணிக்கு ஒளிப்பரப்பாகிய தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து அனைத்து ரசிகா்களின் மனதில் இடம் பெற்றவர் வாணி போஜன். தெய்வமகள் சீரியலானது சமீபத்தில் தான் முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவர் புதிய படமொன்றில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இதனை வாணி போஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் இயக்கும் படத்தில் தான் தெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜன் ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளார். என் மகன் மகிழ்வன் என்ற படத்தை இயக்கியவர் தான் லோகேஷ். இவர் இயக்கும் இரண்டாவது படத்தின் பெயர் என்.ஹெச் 4 என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தான் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இது குறித்து வாணிபோஜன், விருது பெற்ற இயக்குனரின் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மிக பெரிய ரசிக பட்டாளம் வெள்ளித்திரையில் பார்க்கும் ஆவலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.