பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் வைஷ்ணவி தனது காதலரை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் பிரபல வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக கேரளாவை சேர்ந்த விமானி ஒருவரை காதலித்து வந்தார்.

எனவே, இவர்கள் இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் இரு வீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

வைஷ்ணவி தனது முடியை வெட்டி ஆண் போல் சிகை அலங்காரம் செய்திருந்தார். வைஷ்ணவியின் திருமண புகைப்படங்கள் வைரலால பரவி வருகிறது.