அரியலூர் மாணவி அனிதாவின் 18வது பிறந்த நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. நீட் தோ்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் மனம் உடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் மாணவி அனிதா. பிளஸ் 2வில் 1176 மதிப்பெண்கள் பெற்றறிருந்த போதும் அவரது மருத்துவ கனவு கானல் நீரானது. இவா் இறப்பிற்கு மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்த மருத்துவ மாணவியின் இறுதி ஊா்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் கலந்துக்கொண்டனா்.

இதையும் படிங்க பாஸ்-  சினிமாவில் நடிக்க ஜூலிக்கு பெற்றோர் தடை

சமூக வலைத்தளங்களில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நேற்று மருத்துவ மாணவியின் பெயரில் ஒரு படம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியது. இந்த படத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவி அனிதா தோளில் ஸ்டெத்கோப் போட்டு தாமரை மலரில் அமா்ந்து இருப்பது போல உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  பாலாஜியை கேவலமாக பேசும் மகத்! அதிர்ச்சியில் பிக்பாஸ்வீடு

ஜல்லிக்கட்டு மூலம் புகழ் பெற்ற ஜூலி பிக்பாஸ் மூலம் தனதுபெயரை கொஞ்சம் கொடுத்து கொண்டார். அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூலி நடிக்க இருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா். உண்மையாக போராடி உயிரை விட்ட பெண்ணின் வாழ்க்கை படத்தில் இந்த பெண் நடிப்பது சரி இல்லை என்றும் டுவீட் செய்துள்ளனர். மேலும் ஒருவா் மருத்துவ கனவு நிறைவேறாத அனிதாவை இப்படி யாரும் அசிங்கப்படுத்த முடியாது என்று கருத்து பதிவு செய்துள்ளனா்.