கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளை கடந்து வெற்றி நடைபோட்டது. அதுவும் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. அடுத்து சீசன் எப்போது வரும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. சனி ஞாயிறு கமல் வருவார் என்பதற்கென்றே ஒரு ரசிக பட்டாளம் காத்திருந்தது.

தற்போது பிக்பாஸ் சீசன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அண்மையில் தான் புரோமொ வீடியா சூட் நடைபெற்றது. அதில் கமல் கலந்து கொண்டார். தற்போது அந்த வீடியோவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதுகுறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பட்டியல் இணையதளங்களில் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல வரவேற்பும், பெயரும், அதிக ரசிக பட்டாளமும் அமையும் என்ற காரணத்தால், சீசன் இரண்டாம் பாகத்தில் கலந்து கொள்ள நடிகை நடிகர்களிடம் செம போட்டி நடக்கிறது.

ஆனால் சின்னத்திரை தொலைக்காட்சியிலிருந்த காற்று வாக்கில் வந்த செய்தி என்னவென்றால், ராய்லட்சுமி, பூனம் பாஜ்வா, இனியா, ப்ரியா ஆனந்த், ஜனனி ஐயர், சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா, ராஜா ராணி புகழ் ஆலியா மானசா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை. இதற்கிடையில் அண்மையில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது உறுதியாகி விட்ட நிலையில் தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதுபோல நடிகர்களில் பரத், விஜய் வசந்த், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், பிரேம்ஜி, ஷாம், சாந்தனு, பால சரவணன் உள்ளிட்ட பல பெயர்கள் பட்டியலில் இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமில்ல இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான தகவல் என்னவென்றால், பொதுவான நபர்களான எழுத்தாளர் சாரு நிவேதிதா, அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. ஏனென்றால் இந்த சீசனில் மிகவும் பிரபலமான பிரபலங்களை கலந்து கொள்ள வைக்க சேனல் வட்டாரம் கணித்திருப்பதாக கூறப்படுகிறது.