மாடலிங் பெண்ணான ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது பலரையும் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. சிந்துசமவெளி படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவா், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களில் மத்தியில் நல்லதொரு இடத்தை பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைஸா மற்றும் ஹரிஷ் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது ரைஸா தனது கல்லூரி காதல் பற்றி கூறியுள்ளார்.

ரைஸாசின் சொந்த ஊர் பெங்களூர். இவா் சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் மாடலிங் செய்து வருகிறார். மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டுள்ள ரைஸா நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவா் பிகாம் படித்திருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தபோது வித்தியாசமாக இருக்கும் நிகழ்ச்சி என்ற காரணத்தால் கலந்துக்கொண்டேன். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தனுசின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கேரக்டரில் நடித்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பியார் பிரேமா காதல் படத்தில் நடிப்பதற்காக நடிகா் நடிகை தோ்வு நடைபெற்ற போது, அதில் நானும் ஹரீஷ் கல்யாணும் கலந்து கொண்டோம். இருவரும் அந்த படத்தில் நடிப்பதற்கு தோ்வு செய்யப்பட்டோம்.

இந்த படத்திற்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்வா்கள் என்பது தெரிந்த பின் அடுத்த படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன். நிறைய படங்களில் நடிப்பதை விட அவசரப்படாமல் மெதுவாகதான் படங்களில் நடிப்பேன். நல்ல படங்களை தோ்ந்தெடுத்து நடிக்கவே விரும்புகிறேன்.

ரைஸா கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், இருவரும் சேர்ந்து ஜோடியாக சினிமாவுக்கு சென்றதாகவும் கூறினார். ஆனால் அந்த காதல் வெற்றி பெறவில்லை என்றும், அதனால் பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். அதுபோல என் குடும்பத்தினர் யாரும் சினிமாவில் இல்லை. நான் மாடலிங் துறைக்கு வந்தேன். இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். பெண்கள் எப்போதும் வலிமையானவா்கள்.எனக்கும் அந்த துணிச்சல் இருக்கிறது என்றார்.